ஆப்பிள் நிறுவனம் 2017-ம்ஆண்டு இந்தியாவில் பழைய ஐபோன் மாடல்களின் தயாரிப்பைத் தொடங்கியது. ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய மாடல்களும் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், டாடாவின் விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கின்றன. 2022-23 நிதி ஆண்டில் 6.27 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபோன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின. 2023-24 நிதி ஆண்டில் அது 12.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் முதல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் 6 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதியாகியுள்ளது. ஐபோனின் மொத்த இந்திய ஏற்றுமதியில் 50 சதவீதம் தமிழ்நாட்டின் ஃபாக்ஸ்கான் ஆலையிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.