“கேரளாவுக்கு கடத்தப்படுகிறது..”
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்துப் செய்யப்பட்டது. ஆனால், தற்போது எந்த பணியும் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.
இன்றைக்கு மின்சார கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவைகள் உயர்ந்து விட்டது. ரேஷன் கடையில் பருப்பு இல்லை, சமையலுக்கு எண்ணை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஆயிரம் பேருக்கு பொருள்கள் வழங்கவேண்டிய ரேஷன் கடைகளில் 100 பேருக்கு மட்டுமே பொருள்களை வழங்குகிறார்கள். ரேஷன் பொருள்கள் எல்லாம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் இதுபோன்று ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்க மாட்டார்கள், ஏனென்றால் நாங்கள் உழைத்து பிழைக்க பிறந்த கூட்டம், இதைத்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது எடப்பாடி பழனிசாமி வரை வழி நடத்தி வருகிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக ரெடியாக உள்ளது என கூறி வருகிறார்கள், 2011 ஆம் ஆண்டில் இதை கடைபிடித்துதான் தோல்வியை பெற்றார்கள். அதே நிலை தற்போது மீண்டும் வரும். எடப்பாடியார் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதில் பிரச்னை என்று கூறுகிறார்கள், எதற்கு பிரச்னை ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஸ்டாலினோ ஏமாற்றம் இருக்காது மாற்றம் என்று கூறுகிறார். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கிக் கொள்ளுங்கள், இன்னும் 15 அமாவாசை தான் உங்களுக்கு உண்டு. அதனை தொடர்ந்து தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பௌர்ணமி ஆரம்பம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 234-ல் 230 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும், அதற்கு கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் பாடுபடவேண்டும்” என்று பேசினார்.
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.