இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.
கேப்டன் நாராயணன் ஜெகதீசன் 60, ஆந்த்ரே சித்தார்த் 41, பூபதி குமார் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். விஜய் சங்கர் 165 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசியும், பிரதோஷ் ரஞ்ஜன் பால் 73 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். விஜய் சங்கருக்கு இது முதல் தர கிரிக்கெட்டில் 10-வது சதமாக அமைந்தது. அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக தமிழ்நாடு அணி ஆட்டத்தை டிராவில் முடித்தது.
எனினும் பாலோ ஆன் பெற்றதால் ஆட்டத்தை டிராவில் முடித்தாலும் தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு அணி ஒரு வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.