பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, அன்வர் ராஜா, ஓ.எஸ்.மணியன், மணிகண்டன், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, அதிமுக நிர்வாகிகள் வி.வி.ராஜன் செல்லப்பா, எம்.ஏ.முனியசாமி, ராஜ்சத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதுதான் தேவர் பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 1980-ல் சட்டப்பேரவையில் தேவர் படம் திரக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னையில் தேவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது. 2014-ல் தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அதிமுக சார்பில் 13.50 கிலோ தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. இந்த வகையில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிறப்பு சேர்த்தது அதிமுகதான். இவ்வாறு பழனிசாமி கூறினார்.