நேற்று (அக்டோபர் 29) சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாகச் சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்த திடல்களில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், “கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!
Discover more from தமிழ் செய்திகள்
Subscribe to get the latest posts sent to your email.