கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ரூ.220 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. இந்நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மனோஜ் ஜெயஸ்வால், அபிஜித் ஜெயஸ்வால், அபிஷேக் ஜெயஸ்வால் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
250 போலி நிறுவனம்.. – வங்கியிலிருந்து பெற்ற கடனை 250 போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றி மோசடி செய்துள்ளதாக கார்ப்பரேட் பவர் நிறுவனம் மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.